ஜெயலலிதாவின் வாரிசு மு.க.ஸ்டாலின்! - விசிக தலைவர் திருமாவளவன் புகழாரம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துகணிப்புகள் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு போல ஸ்டாலின் செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன் 'கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு போல செயல்படுபவர் மு.க.ஸ்டாலின்.
திமுகவை கட்டுக்கோப்பாக நிர்வகித்து செல்வதில் ஜெயலலிதாவை பிரதிபலிக்கிறார். தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ளது' எனக் கூறியுள்ளார்.