விடுதலை சிறுத்தைகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் இவை தான்.!
Parliament
election
party
By Jon
சட்டமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று உடன்படிக்கை கையெழுத்தானது. ஆறு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திருனாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் தொகுதிகள் முடிவாகவில்லை. இந்நிலையில் விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
வேளச்சேரி ,கள்ளக்குறிச்சி , காட்டுமன்னார்கோயில் ,உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விருப்பம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் திட்டக்குடி, சோழிங்கநல்லூர் ,புவனகிரி ,குன்னம், மயிலம் ஆகிய தொகுதிகளின் பட்டியலையும் திமுகவிடம் விசிக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.