என்னை ஏமாற்றிவிட்டார்! நடிகர் ஆர்யா மீது இலங்கை தமிழ்ப் பெண் பரபரப்பு புகார்

actor movie flim
By Jon Feb 26, 2021 01:02 PM GMT
Report

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் நடிகர் ஆர்யா மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்காக ஆதாரங்களையும் தன் புகாரில் அவர் இணைத்துள்ளார்.

என்னை ஏமாற்றிவிட்டார்! நடிகர் ஆர்யா மீது இலங்கை தமிழ்ப் பெண் பரபரப்பு புகார் | Vidja Aryaa Police Germany

இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. விட்ஜா கூறுகையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தனக்கு படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார். மேலும், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றார்.

பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெற்றார். சில மாதங்கள் கழித்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது எனக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து, நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது, ஆர்யாவின் தாயார் ஸ்ரீலங்கா நாட்டு நாய் நீ, உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்க என்று மோசமான வார்த்தைகளால் திட்டினார் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், இந்த விடயத்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்போது, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், தற்கொலை செய்து கொள்ள போவதாக என்னை மிரட்டுகிறார். அவர் எப்படி நாடகம் போட்டாலும் நான் என் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை. கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை.

நான் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் வர வேண்டும். எனக்கு நீதியும் வேண்டும். தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று விட்ஜா தெரிவித்துள்ளார்.