வானதி சீனிவாசன் மீது அவதூறு பரப்பி வீடியோ: கணவர் போலீசில் மனு
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனின் கணவர், சமூகவலைத்தளத்தில் வீடியோ மூலம் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனருக்கு மனு கொடுத்துள்ளார். கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் உடைய வானதி சீனிவாசன் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அவருடைய கணவர் சீனிவாசன் கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அளித்திருக்கிறார்கள். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய மனைவி பாரதிய ஜனதா சார்பாக கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த சூழ்நிலையில் பா.ஜ.க,விற்கு வெற்றிவாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை முறியடிக்கும் நோக்கத்தோடு ஒரு சிலர் முகநூலில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தனர்.
அதில் என்னையும், எனது மனைவியையும், என் மனைவியுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரித்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. ஆதலால் தேர்தல் நேரத்தில் இதுபோல அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.