ஆற்றங்கரையில் துள்ளி ஓடும் டைனோசர்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ

By Petchi Avudaiappan May 14, 2022 09:12 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆற்றங்கரையில் நீண்ட கழுத்தைக் கொண்ட குட்டி டைனோசர்கள் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

டைனோசர்கள் இப்போது இல்லை என்றாலும் அவை வாழ்ந்ததற்கான சான்றுகள் அவ்வப்போது நடைபெறும் ஆராய்ச்சியில் கிடைத்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து போனதற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றது. சமீபத்தில்கூட டைனோசர் ஒன்றின் கருமுட்டை அழியாமல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் டைனோசர்ஸ் பற்றிய படமான ஜூராசிக் பார்க் படத்தினை எந்த மொழியைச் சேர்ந்த ரசிகர்களாலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரிடத்திலும் டைனோசர்ஸ் பரீட்சையமாக உள்ளது. 

இந்நிலையில் டைனோசர்கள் குட்டிகள் ஆற்றங்கரை ஒன்றில் ஓடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ட்விட்டரில் Buitengbieden என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.  ஆனால் நன்றாக உற்றுப்பார்த்தால் அந்த வீடியோவில் இருப்பவை கோடிமுண்டிஸ் என்றும் அழைக்கப்படும் கோட்டிகள் ஆகும். புரோசியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த இவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டி உயிரினங்களாகும்.

இது நீண்ட ரோமத்துடன் கூடிய வாலை கொண்டுள்ள நிலையில் அவை ஓடும்போது அதனை தூக்கிக்கொண்டு ஓடும். இதில் எடுக்கப்பட்ட வீடியோ இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் ஓடிய வீடியோவை ரீவைண்ட் செய்து பதிவிடப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு டைனோசர்கள் ஓடுவது போன்று உள்ளது.