ஆட்டமா தேரோட்டமா...நடிகை ரம்யா பாண்டியன் செய்த அதிர்ச்சி சம்பவம் - மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள்..!

Ramya Pandian
By Thahir May 13, 2022 04:04 PM GMT
Report

சேலத்தில் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ரம்யா பாண்டியன்.

ஆட்டமா தேரோட்டமா...நடிகை ரம்யா பாண்டியன் செய்த அதிர்ச்சி சம்பவம் - மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள்..! | Video Of Actress Ramya Pandian Dancing Viral

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இறுதி வரை சென்றார். இதன்பின் விஜய்டிவியின் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய ரம்யா பாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி கலக்கிய ரம்யா பாண்டியன் 3-வது இடம் பிடித்து அசத்தினார்.

ஆட்டமா தேரோட்டமா...நடிகை ரம்யா பாண்டியன் செய்த அதிர்ச்சி சம்பவம் - மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள்..! | Video Of Actress Ramya Pandian Dancing Viral

இந்நிலையில் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ரம்யா பாண்டியன்.

நிகழ்ச்சியின் போது மேடையில் மாணவ மாணவிகளுடன் இணைந்து பீஸ்ட் பட பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.