என்னை உன்னால் பிடிக்க முடியாது ..புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்களை பகிர்ந்து கருத்து கூறுவார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்துள்ள வீடியோ பதிவில்,சிறிய நீர்தேக்கத்தில் நீந்திசெல்லும் வாத்தை பிடிக்க புலி ஒன்று முயல்வதும், அந்த புலியிடம் அகப்படாமல் இருக்க தண்ணீருக்குள் மூழ்கி வாத்து தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவினை பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா கருத்து ஒன்றினை கூறியுள்ளார் அதாவது, வியாபாரத்தில் விரைந்து முடிவெடுத்து செயலாற்றக்கூடிய சிறிய நிறுவனமாக இருப்பதின் பயன் இதுதான் ( அதாவது வாத்தினை போல) புது வர்த்தக வாய்ப்புகளை அடைவதற்காக சிறிய நிறுவனங்களை கைப்பற்றுவதில் பெரும் நிறுவனங்கள்(புலி) அக்கறை காட்டுவதாகவும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.