தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய சிறுவன்: மயங்கி விழுந்து மரணம்
புதுச்சேரியில் தொடர்ச்சியாக நான்கு மணிநேரம் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சார்ந்த தர்ஷன் என்ற 16 வயது மாணவன் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று 4 மணி நேரம் தொடர்ந்து ஹெட்போன் அணிந்து கொண்டு தனது வீட்டில் செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.
அப்போது திடீரென தர்ஷன் மயங்கிவிழ, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தர்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள், தர்ஷனுக்கு இருதய நோய்கள் இருப்பதற்க்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.