வாக்களிப்பதை வீடியோவாக எடுத்த நபர் கைது

By Fathima Apr 23, 2026 11:47 AM GMT
Report

தான் வாக்களிப்பதை வீடியோவாக எடுத்த தவெக-வை சேர்ந்த நபர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில் மதியம் 3 மணிநேர நிலவரப்படி 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது, இந்நிலையில் வாக்களிக்க செல்லும் போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது.

அதில் முக்கியமாக வாக்களிப்பதை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுக்ககூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளது, மீறி நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதை வீடியோவாக எடுத்த நபர் கைது | Video During Cast Vote

இந்நிலையில் தான் வாக்களிப்பதை வீடியோவாக எடுத்த தவெக-வை சேர்ந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் தொகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் தவெகவை சேர்ந்த சக்திவேல் என்பவர் வாக்கு செலுத்த சென்ற போது, விசில் சின்னத்துக்கு வாக்களித்ததை வீடியோவாக எடுத்துள்ளார், இதை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.