பார்க்கிங் ஏரியாவில் உறங்கிய குழந்தை; கார் ஏறி பலி - பதைபதைக்கும் வீடியோ!

Hyderabad Death
By Sumathi May 26, 2023 10:52 AM GMT
Report

பார்க்கிங் பகுதியில் தூங்கிய குழந்தையின் மீது கார் எறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கிய குழந்தை

கர்நாடகா, கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 6 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.இருவரும் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு குழந்தைகளுடன் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு, ஹயாத் நகர் பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பார்க்கிங் ஏரியாவில் உறங்கிய குழந்தை; கார் ஏறி பலி - பதைபதைக்கும் வீடியோ! | Video Child Crushed Death Car Parking Hyderabad

இந்நிலையில், வழக்கம் போல கவிதா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது 2 வயது மகள் லட்சுமியையும் உடன் கொண்டு சென்றுள்ளார். குழந்தையுடன் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

கார் ஏறி பலி

அதன்பின், வெயில் காரணமாக ருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் ஓரமாக துணி ஒன்றை விரித்து போட்டு குழந்தையை தூங்க வைத்துள்ளார். தொடர்ந்து, கட்டட பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஹரிராமகிருஷ்ணா என்ற நபர் வெளியே சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். தனது பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்த வந்த அவர், தரையின் ஓரத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்ததை கவனிக்காமல் காரை பார்க் செய்தார்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது கார் ஏறியது. அதில், சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. அங்குள்ள சிசிடிவியில் இந்த திடுக்கிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.