செல்போனில் வந்த நிர்வாண வீடியோ கால் : 17 லட்சத்தை இழந்த வங்கி அதிகாரி
64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு நிர்வாண வீடியோ கால் செய்த பெண் ஒருவர் அதனை ரெக்கார்ட் செய்து, மிரட்டி அவரிடம் பண மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
வங்கி அதிகாரிக்கு வந்த வீடியோ கால்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரம் சாதாரணமாக சென்ற பேச்சு, திடீரென ஆபாசமாக மாறியது.
சில மெசேஜுகள் அனுப்பிய பின், அந்த பெண் வீடியோ கால் செய்துள்ளார். அதில், அந்த பெண் நிர்வாணமாக இருந்த நிலையில், வீடியோ காலில் வங்கி அதிகாரியின் முகத்துடன் வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார்.
பிறகு அந்த பெண், தொடர்பு கொண்டு ரூ.10,000 கேட்டு மிரட்டியுள்ளார். கொடுக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று விக்ரம் ரதோட் என்பவர் அவரை தொடர்புகொண்டு, தான் டெல்லி சைபர் க்ரைம் காவல்துறையில் பணியாற்றுவதாகவும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பணம் கேட்டு மோசடி
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.16.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டிய நிலையில், அந்த நபருக்கு சில தவணைகளாக அந்த பணத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் தொடர்புக்கொண்டு அந்த வீடியோவை அந்த பெண் யூடியூப்பில் வெளியிட்டதாகவும், அந்த சேனலின் ஓனர் ரன்வீர் குப்தா தொடர்பு கொள்வார் என கூறியுள்ளார்.
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ரன்வீர் குப்தா என்பவர் வங்கி அதிகாரிக்கு தொடர்பு கொண்டு, வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க ரூ.1.30 லட்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
அன்று வங்கி விடுமுறை என்பதால் அவர் நண்பர் ஒருவர் மூலம் பணத்தை ஆன்லைனில் ட்ரான்பர் செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் ரதோட் அவரை அழைத்து, அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவர்கள் பெற்றோர்கள் இழப்பீடாக பணம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பயந்துப்போன அந்த வங்கி அதிகாரி, காவல் நிலைத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.