அஜர்பைஜானில் வெடித்த கலவரம்...ஆபத்தில் சிக்கிய விடாமுயற்சி படக்குழு..?பரபரப்பை ஏற்படுத்திய பிரபலத்தின் ட்வீட்
நீண்ட நாட்கள் இழுபறியை தொடர்ந்து இன்று நடிகர் அஜித் குமாரின் "விடா முயற்சி"யின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்கியுள்ளது.
விடாமுயற்சி
லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படம் துவங்குவதற்கு முன்பே பல தரப்பட்ட பிரச்சனைகள் சந்தித்தது. இயக்குனர் மாற்றம், முடிவாகாத கதை, படப்பிடிப்பு துவங்குவதில் இழுபறி என படம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தள்ளி போடப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் அஜித் பைக் டூர் கிளம்பிவிட படப்பிடிப்பு துவங்குமா என்ற கேள்வியே ரசிகர்களுக்கு பெரிய அளவில் எழுந்தது. அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசைமையமைப்பதாக இறுதியான இந்த படம், நீண்ட இழுபறிகளுக்கு பிறகு இன்று அசர்பைஜான் நாட்டில் துவங்குகிறது.
சிக்கலாகிறதா படப்பிடிப்பு
இதன் காரணமாக அஜித் ரசிகிர் பெரிய கொண்டாட்டத்தில் இருக்கும் சூழலில், தற்போது மற்றொரு செய்தி அவர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு துவங்கும் இதே நாளில் அந்நாட்டில் இருதரப்பு மக்களிடையே மோதல் நடைபெற்று வருவதாகவும், இந்த நேரத்தில் அங்கு ஷூட்டிங் செய்வது சரியாக இருக்குமா? என்றும் கேள்விகள் எழுத்துள்ளது.
I believe #VidaaMuyarchi team is in #Baku - the Capital of Azerbaijan ?? in the far east..
— Ramesh Bala (@rameshlaus) October 4, 2023
The conflict happened in the far west Nagarno - Karabakh region.. 100,000 Armenians have already left.. The conflict is over.. Azerbaijan has secured the region..
It's like one region..… https://t.co/3ikfTpCdhe pic.twitter.com/uJHS5NAQTQ
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல சினிமா ஊடகவியலாளரான ரமேஷ் பாலா, “அஜர்பைஜான் தலைநகர் பக்கூ கிழக்கு பக்கம் இருக்கிறது. மோதலானது வடக்கு நாகோர்னோ-காராபாக் பகுதியில் நடைபெற்றது. 100,000 ஆர்மேனியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அஜர்பைஜான் பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஆகையால் பிரச்சினை இல்லை” என்று அவர் தனது டீவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.