விக்டோரியா மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை! சசிகலாவும் சம்மதம் தெரிவித்ததாக தகவல்
விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார் என மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான சசிகலாவுக்கு விக்டோரியா மருத்துவமனையின் கொரோனா வார்டில் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் சமீபத்திய மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் விக்டோரியா மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது என்றும், தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் கோரிக்கையை நிராகரித்தது உண்மைதான் எனவும் தெரிவித்துள்ளார்.