சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
விக்டோரியா கவுரி இன்று சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், வழக்கை அவசரமாக விசாரித்த உச்சநீதிமன்றம். நியமனத்திற்கு எதிராக பிரசாந்த் பூஷன், ராஜு ராமச்சந்திரன், ஆனந்த் குரோவர் வாதிட்ட நிலையில், விக்டோரியா கவுரி காலை 10.35 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கானது இரண்டு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தையடுத்து சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதயிறேற்றார் விக்டோரியா கவுரி.
முன்னதாக வழக்கின் விசாரணையின் போது , நீதிபதியாக பதவி ஏற்க வழக்கறிஞர் விக்டோரியா கவுரி தகுதியற்றவர் என மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் வாதம் முன்வைத்தார்.
விக்டோரியா கவுரி பதவி ஏற்புக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். அரசியல் பின்னணியில் உள்ளவர்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விக்டோரியா கவுரியை அரசியல் காரணத்துக்காக எதிர்க்கவில்லை, வெறுப்பு பேச்சுக்காக மட்டுமே எதிர்க்கிறோம் என வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த சூழலில் விக்டோரியா கவுரி நியமனத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது , வழக்கினை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.