விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
விக்டோரியா கவுரி
மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. விக்டோரியா கவுரி இன்று சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், வழக்கை அவசரமாக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
நியமனத்திற்கு எதிராக பிரசாந்த் பூஷன், ராஜு ராமச்சந்திரன், ஆனந்த் குரோவர் வாதிடவுள்ளனர். பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
அமர்வுக்கு மாற்றம்
இவர் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர் என குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விக்டோரியா கவுரி காலை 10.35 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கானது இரண்டு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.