நைட் ரூமுக்கு வா; அழைத்த டாப் நடிகர், கன்னத்தில் விழுந்த அறை - சினிமாவில் விலகிய விசித்ரா!

Bigg Boss Vichithra
By Sumathi Nov 22, 2023 06:24 AM GMT
Report

விசித்ரா தனது சினிமா கேரியரில் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை விசித்ரா

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்த டாஸ்க்வைக்கப்பட்டது. அதில் கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் பல கசப்பன சம்பவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

actress vichitra

அந்த வரிசையில் பேசிய விசித்ரா, “2001-ல் இருந்து நான் சினிமாத்துறையில் இருந்து காணாமல் போனேன். யாருக்கும் அதற்கான காரணம் தெரியாது. ஒரு டாப் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்பான பார்ட்டியில் என்னை சந்தித்த அந்த நடிகருக்கு என் பெயர் கூட அவருக்கு தெரியாது. நீங்க இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டு விட்டு பிறகு

பிக்பாஸ் 7 

‘என் ரூமிற்கு வாருங்கள்’ என்று வெளிப்படையாகவே அழைத்தார். குடித்து விட்டு வந்து எனது அறைக் கதவை பலமாக தட்டுவார்கள். இன்னமும் கூட அந்த சத்தம் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்ற போது, பைட்டர்கள் மற்றும் ஜுனியர் ஆர்டிஸ்டுகளுடன் ஒரு கலவர காட்சி எடுக்கப்பட்டது.

big boss tamil 7

அப்போது ஆக்‌ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறான இடங்களில் தொட்டார். இதையடுத்து அந்த ஷாட் ரீ-டேக் எடுக்கப்பட்டது. அப்போது மீண்டும் அதேபோல செய்தார். பின்னர் மூன்றாவது டேக் எடுத்த போது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன். உடனே அவனது கையை பிடித்து இழுத்து சென்று ஸ்டண்ட் மாஸ்டரிடம் நிறுத்தினேன்.

தமன்னா பண்ணா அப்படி..நான் பண்ணா இப்படியா? என்னை ஏமாற்றி.. - நடிகை விசித்ரா!

தமன்னா பண்ணா அப்படி..நான் பண்ணா இப்படியா? என்னை ஏமாற்றி.. - நடிகை விசித்ரா!

அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் எனது கன்னத்தில் ஓங்கி அரைந்துவிட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை என்பதால் தான் சினிமாவை விட்டே விலகி இருந்தேன். அந்த ரணத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அதற்கு தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.