நாட்டிற்காக போராடிய தலைவா்களின் தியாகங்களை நினைவுகூா்வோம்: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு!
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்தியில் :
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவா்களின் எண்ணிலடங்காத உன்னத தியாகங்களை நினைவுகூா்வோம். அவா்களது கனவு இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்க வேண்டும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், வளா்ச்சியின் பலன்களை முறையாக விநியோகிப்பதிலும், நாட்டில் ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலும் நம் நாட்டின் வளா்ச்சி மற்றும் நலன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நீதி, சுதந்திரம், சமநிலை, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் நமது அரசியலமைப்புக் கொள்கையை அடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சுதந்திர தினம் என்னும் மகிழ்ச்சியான தருணத்தில், நமது ஆற்றல்களை மீண்டும் கண்டுணா்வதற்கு நம்மை முழுவதும் அா்ப்பணிக்கவும், நம் மக்களின் மிகப்பெரிய திறமைகளை உணரவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கான சரியான இடத்தை வழங்கவும் மீண்டும் ஒருமுறை உறுதி மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்