கொரோனா 2வது டோஸை போட்டுக்கொண்டார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு!
கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று போட்டுக்கொண்டார். உலகை அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதனையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனைடுத்து, கடந்த மாதம் 1ம் தேதி கொரோனாவின் முதல் தடுப்பூசியை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம், சரியாக 28 நாள்கள் இடைவெளியில் 2ம் கட்ட தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்று கூறினார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று செலுத்திக்கொண்டார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இன்று டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டேன். அதுபோலவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.