தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!

M Karunanidhi Shri M Venkaiah Naidu DMK
By Swetha Subash May 28, 2022 12:27 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

சென்னை அண்ணா சாலையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாழுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணுவித்து வரவேற்றார். பின்னர், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்! | Vice President Inuagrates Kalaignar Statue Chennai

கலைஞரின் ஐந்து கட்டளைகள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்புவகித்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலையின் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.

அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியைத் தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.