முதல்வர் மற்றும் துணை முதல்வர் புகைப்படத்துடன் சசிகலாவை வரவேற்று அடித்த போஸ்டரால் பரபரப்பு
சசிகலா அவர்களை வரவேற்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரது புகைப்படத்துடன் அடிக்கப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா அவர்கள் கடந்த ஜனவரி மதம் 27ம் தேதி சொத்துகுவிப்பு வழக்கு தண்டனையில் இருந்து விடுதலையானார். அதன் பின்பு முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.
அதனிடையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாள் முதல் அவருக்கு அதிமுக தரப்பு அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தும், அவரை வரவேற்றும் போஸ்டர்கள் அடித்தனர். அதற்கு அதிமுக தலைமையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், புதுக்கோட்டை, கறம்பக்குடியில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வருவர் ரெங்கசாமி.
இவர், சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் படங்களையும் இணைத்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்.
இதேபோன்று, புதுக்கோட்டை நகர அ.தி.மு.க. இணை செயலர் பூரணம் ஆறுமுகம் என்பவரும், சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து நகரம் எங்கும் ஒட்டியுள்ளார். அதிமுகவில் நாளுக்கு நாள் சசிகலாவுக்கு ஆதரவு பெருகிவருவதையே இது காட்டுகிறது என சசிகலா ஆதரவாளர்களும், உறவினர்களும் கூறுகின்றனர்.