"யாரும் யாருக்கும் அடிமை இல்லை" ஓ.பன்னீர்செல்வம்

election sasikala edappadi
By Jon Feb 11, 2021 12:33 PM GMT
Report

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான சசிகலா நேற்று காலை பெங்களூரிவில் இருந்து சென்னை திரும்பினார். மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு அதிமுகவில் உயர் பதவியில் உள்ள சிலர் ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்! கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.