துணைவேந்தர் சூரப்பா இன்றுடன் ஓய்வு - சர்ச்சை முடியுமா?

university anna Surappa conttroversy
By Jon Apr 11, 2021 01:10 PM GMT
Report

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர் சூரப்பா நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்பும் மேலும், பல்வேறு போராட்டங்களும், சர்ச்சைகளும் வெடித்தன.

இந்த நிலையில் இன்றுடன் அவரது பதவி காலம் முடிவடையுள்ளது. ஏற்கனவே இரண்டு பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால், இவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதால், இன்றுடன் அவர் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.  

துணைவேந்தர் சூரப்பா இன்றுடன் ஓய்வு - சர்ச்சை முடியுமா? | Vice Chancellor Surappa Retires Today Controversy

இந்நிலையில் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நிர்வாக குழு, ஓரிரு நாளில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சூரப்பா மீதான விசாரணையில், 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்திருந்தார்.