தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

Tamil nadu ADMK DMK AIADMK
By Thahir Oct 22, 2022 11:41 AM GMT
Report

தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த நான்கு ஆண்டுகள் மிகவும் மோசமாக இருந்தது என பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை வேந்தர் பதவி விற்பனை - ஆளுநர் 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த 4 ஆண்டுகள் மிகவும் மோசமாக இருந்தது.

அங்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்படி பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்.

Vice-Chancellor

எனேவ இந்த பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என பஞ்சாப் அரசு என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் தகுதியானவர் என்றெல்லாம் தெரியாது. கல்வித் தரம் உயரவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்" என தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியின் போது தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் இந்த குற்றச்சாட்டு தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எடப்பாடி பழனிசாமியின் ஊழலை அம்பலப்படுத்தும் விதமாகவும் ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.