வயாகரா சாப்பிட்டால் இப்படி நடக்குமா? மருத்துவ உலகை உலுக்கிய ஆய்வு முடிவுகள்!

United States of America India
By Swetha Jun 12, 2024 06:59 AM GMT
Report

வயாகரா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

வயாகரா  

ஆண்கள் பாலியல் உறவில் தங்கள் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்து தான் வயாகரா. தற்போது இது குறித்து பல சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் தான் வயாகரா.

வயாகரா சாப்பிட்டால் இப்படி நடக்குமா? மருத்துவ உலகை உலுக்கிய ஆய்வு முடிவுகள்! | Viagra May Helps With Alzheimer Says Recent Result

அதுவே நாளடைவில் மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது. வயாகரா என்று அழைக்கப்படும் இந்த சில்தெனாபில் மருந்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் வாஸ்குலார் டிமென்ஷியா எனப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது எனவும், நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும்

ராணுவ வீரர்களுக்கு வயாகரா.. உக்ரைன் பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை - ஐநா பிரதிநிதி

ராணுவ வீரர்களுக்கு வயாகரா.. உக்ரைன் பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை - ஐநா பிரதிநிதி

ஆய்வு முடிவுகள்

அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆயவன் முடிவுகள்படி, நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

வயாகரா சாப்பிட்டால் இப்படி நடக்குமா? மருத்துவ உலகை உலுக்கிய ஆய்வு முடிவுகள்! | Viagra May Helps With Alzheimer Says Recent Result

இந்த வயாகரா மாத்திரை நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக நியாபக மறதி மொத்தம் இரண்டு வகைப்படும். ஒன்று, மூளையில் படியும் Amyloid பீட்டா படிமங்கள் நியூரான்களின் தொடர்பை துண்டிப்பதால் ஏற்படும்

அல்சைமர் நியாபக மறதி, மற்றோன்று முன்கூறிய வாஸ்குலார் நியாபக மறதி. இந்தியாவில் அல்சைமர் நியாபக மறதியை விட வாஸ்குலார் நியாபக மறதியே அதிகம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.