’’அற்புதம்மாள் வாழ்க்கை வரலாற்றை இயக்கப் போகும் வெற்றிமாறன்’’ ஹீரோயின் யார்?

vetrimaaran biopic arputhamal
By Irumporai Oct 28, 2021 02:06 PM GMT
Report

32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து  பேரறிவாளனை விடுவிக்க தனி நபராக போராடி வரும் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசுரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த அடுத்த படங்கள் குறித்த தகவல்கள்  வந்து கொண்டே  உள்ளது.

இந்த நிலையில், அற்புதம்மாளின் பயோபிக்கில் இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆடுகளம் படத்திற்காக ஏற்கனவே தேசிய விருது வென்ற தனுஷ் அசுரன் படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற நிலையில், மீண்டும் வெற்றிமாறன் தனக்கான என்ன கதையை எழுத போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என அடுத்த படத்திற்கான சிக்னலை கொடுத்துள்ளார்

ஆனால், வெற்றிமாறன், விடுதலை, வாடிவாசல், விஜய் உடன் ஒரு படம் மற்றும் அற்புதம்மாளின் பயோபிக் என ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறார். .

கூடிய விரைவிலேயே அற்புதம்மாள் பயோபிக் பற்றிய அறிவிப்பையும் அந்த படத்தில் பேரறிவாளனாகவும் அற்புதம்மாளாகவும் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது