எனக்கு வெற்றிமாறன் படத்தில் நடிக்க சுத்தமா விருப்பமே இல்ல… - பட்டென போட்டுடைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறன். ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார் வெற்றிமாறன்.
தான் இயக்கும் அனைத்து படத்திற்கும் ஏதாவது ஒரு விருது வாங்கி தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திவிடுவார் வெற்றிமாறன்.
2011ம் ஆண்டு மீண்டும் தனுஷூடன் கைகோர்த்து ‘ஆடுகளம்’ படத்தை இயக்கினார். இப்படம் படம் மாபெரும் வெற்றியை கொடுத்து, தேசிய விருதையும் தட்டி சென்றது.
இப்படத்தில் நடித்தவர்தான் நடிகை மீனால். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில், சமீபத்தில் நடிகை மீனால் பேட்டி ஒன்று கொடுத்தார்.
அந்தப் பேட்டியில், ஆடுகளம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.
இயக்குனர் வெற்றிமாறன் ‘ஆடுகளம்’ படத்தில் என்னை கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தார். என் கதாபாத்திரத்தை பற்றி வெற்றிமாறன் கூறியவுடன் எனக்கு பிடிக்கவில்லை. நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். பிறகு முழு கதையையும் கேட்டபின்புதான் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்றார்.