”சிவசாமியை தந்த வெற்றிமாறனுக்கு நன்றி” தேசிய விருது பெற்ற தனுஷ் நெகிழ்ச்சி அறிக்கை
இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 67வது தேசிய விருதுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதும், நடிகர் தனுஷுக்கு அசுரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விசுவாசம் திரைப்படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலகஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிவசாமி கதாபாத்திரத்தை தந்த வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
OM NAMASHIVAAYA ??? pic.twitter.com/XXFo8BDRIO
— Dhanush (@dhanushkraja) March 23, 2021