விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த வெற்றிமாறன்? உண்மை என்ன?
இயக்குநர் வெற்றிமாறன் தவெக கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.
தவெக 2வது ஆண்டு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவான இன்று(02.02.2025) முன்னிட்டு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொள்கை தலைவர்கள் 5 பேருக்கும் சிலை அமைக்கப்பட்டு, தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இயக்குநர் வெற்றிமாறன்
தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்ட தவெக சார்பில், மாட்டுவண்டி பந்தய நிகழ்ச்சியை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு தவெக நிர்வாகிகள் ராட்சத மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவிய நிலையில் வெற்றிமாறன் தவெகவில் இணைந்து விட்டார் என தகவல் பரவியது.
இது குறித்து விசாரித்ததில் இயக்குநர் வெற்றிமாறன், அடுத்த படத்தின் வேலைகளுக்காக மதுரையில் இருப்பதாகவும் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார் கட்சியில் இணையவில்லை என கூறப்படுகிறது.