‘வெற்றி தமிழ்நாடு 2026’ - இன்று சென்னையில்
Vetri Tamilnadu 2026: சென்னையில் இன்று வெற்றித்தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இன்று காலை 11 மணியளவில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி வைக்கிறார், இவருடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.

அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தள பதிவு
இதுதொடர்பில் அமைச்சர் கீர்த்தனா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.
தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் IBC Tamil