விவசாயிகள் போராட்டத்திற்கு இயக்குநர் வெற்றி மாறன் ஆதரவு!
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து இயக்குநர் வெற்றிமாறன் ஃபேஸ்புக்கில் பதிவு எழுதியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவர்களுக்கு ஆதரவாக உலகமெங்கும் உள்ள பல் பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவக கருத்து தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், ஃபேஸ்புக்கில் எழுதியதாவது: போராட்டம் என்பது செவிசாய்க்கப்படாத கோரிக்கைகளை உடைய மக்களின் வெளிப்பாடு.
அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கியவர்கள் மக்கள். அது, மக்களின் நலனைக் காக்க வேண்டும். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது. நாட்டின் ஆன்மாவைக் காக்க விவசாயிகள் முயல்கிறார்கள்.
தங்களின் உரிமைகளுக்காக போராடுவதும் அப்போராட்டத்துக்கு ஆதரவளிப்பதும் ஜனநாயகமாகும் என்று கூறியுள்ளார்.