"இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் - திருமாவளவன்

Thol. Thirumavalavan Vetrimaaran
By Irumporai Oct 05, 2022 05:16 AM GMT
Report

இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் பேச்சு

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்று பேசியபோது.… “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும்.

"இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் - திருமாவளவன் | Vetermaran Grandson Of Periyar Thirumavalavan

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார். இதற்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.    

பெரியாரின் பேரன்

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு.

இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை.. என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர்.

இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா?இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்"என்று குறிப்பிட்டுள்ளார்.