5 நாட்களாக கைக்குழந்தையுடன் நடந்து வந்த தம்பதி: கார் கொடுத்து உதவிய மருத்துவர்
கோவையில் இருந்து சென்னையை நோக்கி 5 நாட்களாக கைக்குழந்தையுடன் நடந்துவந்த தம்பதியினருக்கு அரசு கால்நடை மருத்துவர் தனது சொந்த காரை கொடுத்து சென்னைக்கு அனுப்பிவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மதுக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினரான நவின், ரம்யா தனது 1 வயது பெண் குழந்தையுடன் குடும்ப வறுமை காரணமாக சென்னையில் ஹோலபிரிக்ஸ் கல் தயாரிக்கும் வேலைக்கு செல்ல கடந்து 5 நாட்களாக நடந்தே சென்னையை நோக்கி சென்றுள்ளனர்.
இவர்கள் வேலூர் வழியாக நடந்து செல்வதை பார்த்த வேலூர் கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர் அவர்களிடம் பிரச்சனையை கேட்டறிந்து தம்பதிகளுக்கு உதவும் வகையில் தனது தொண்டு நிறுவனத்தின் காரில் தனது சொந்த செலவில் அவர்களை அழைத்து சென்று சென்னையில் விட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.