புற்றுநோயால் பிரபல மூத்த நடிகை காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Mumbai
Death
By Thahir
புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த மூத்த நடிகை பைரவி வைத்யா காலமானார்.
பிரபல மூத்த நடிகை காலமானார்
பழம்பெரும் நடிகை பைரவி வைத்யா காலமானார். அவருக்கு வயது 67. மூத்த நடிகையான பைரவி வைத்யா, சோரி சோரி சுப்கே சுப்கே, நிமா டென்சோங்பா உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்தி திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள பைரவி வைத்யா கடந்த 8ம் தேதி காலமானதாக மும்பை திரைப்பட மற்றும் சின்னத்திரை சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நடிகை பைரவி வைத்யா, இந்தி திரைப்பட நடிகையாக அறியப்பட்டிருந்தாலும் பல குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.