இந்த 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சில இடங்களில் மழை
தொடர்ந்து நாளை (1-ந்தேதி) முதல் 4-ந்தேதி வர அநேக இடங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.