அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கடும் மழை இருக்கு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By Irumporai Nov 04, 2022 03:16 AM GMT
Report

தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடிய இந்த 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களில் கன மழை

தற்போது கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கடும் மழை இருக்கு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Very Heavy Rain 7 Dist Tamilnadu

ஆகவே இன்றைய நிலவரப்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர்,ம்யிலாடுதுறை , விழுப்புரம் ,கடலூர்,நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஆரஞ்சு எச்சரிக்கை

இந்த ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கடும் மழை இருக்கு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Very Heavy Rain 7 Dist Tamilnadu

இதே போல் புதுக்கோட்டை, மதுரை, தேனி ,சிவகங்கை ,விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.