ரஜினி என்னை ரூமுக்கு அழைத்தார்; 2 மணி நேரம்.. தனி அறையில் - பிரபலம் பகீர் தகவல்!
ரஜினிகாந்த் பற்றி சில தகவல்களை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பகிர்ந்துள்ளார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் ஒரு படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தேன். அந்த படத்துக்கான படபிடிப்பு மைசூரில் நடந்தது.
அப்போ ரஜினிகாந்த் ஒரு முறை என்னிடம் சூட்டிங் முடிந்து என்ன பண்ணுவீங்க என்று கேட்டார். அதற்கு நான் ஒன்னும் பண்ண மாட்டேன் ரூமில் தனியாகத்தான் இருப்பேன். சில நேரங்களில் மது அருந்துவேன் என்று சொன்னேன். அதற்கு ரஜினிகாந்த் அப்படியா அப்போ ரெடியா இருங்க கார் அனுப்புறேன் என்று சொன்னார்.
ரஜினிகாந்த்
அவர் சொன்னது போலவே கார் வந்தது. நானும் காரில் ஏறி அவருடைய அறைக்கு போனேன். பிறகு அவருடைய அறையில் நானும் மது அருந்தி கொண்டே இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையில் வேறு யாருமே இல்லை.
அப்போ கூட நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கேட்க மாட்டேன். அதற்குப் பிறகு என்னை அவர் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிருந்தார். அங்கு சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து நான் நல்லா சாப்பிட்டதும் என்னை அறையில் கொண்டு வந்து விட்டு விட்டு போய்விட்டார்.
அதற்கு பிறகு ரஜினிகாந்துடன் எனக்கு அதிகமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரம் ரஜினிகாந்த் ரொம்பவும் பண்பான மனிதர் எனத் தெரிவித்துள்ளார்.