ஹரி வைரவன் இறப்பதற்கு முன் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்...! - ரசிகர்கள் சோகம்...!
ஹரி வைரவன் மரணத்தையடுத்து, அவரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் உறுதியளித்துள்ளார்.
‘வெண்ணிலா கபடி குழு’ படம்
சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம்தான் ‘வெண்ணிலா கபடி குழு’. இப்படத்தில் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் உட்பட பல நடிகர்கள் நடித்தனர். இப்படத்தில் நடித்த ஹரி வைரவன் ‘குள்ளநரி கூட்டம்’, ‘நான் மகான் அல்ல’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் ஹரி வைரவன் உடல்நிலை கவலைக்கிடமாக தகவல் வெளியானது.
என் கருணை கொலை செய்து விடுங்கள்...
சமீபத்தில் ஒரு சேனலுக்கு ஹரி வைரவனும், அவரது மனைவியும் பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியில் அவரது மனைவி கவிதா கண்ணீர் மல்க பேசினார்.
என் கணவர் சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு என உடல் முழுவதும் பல வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறார். நடக்க கூட முடியாமல் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்.
மருத்துவர்கள் 6 மாதம் தான் இவர் உயிரோடு இருப்பார் என்று கை விரித்துவிட்டனர். அவர் உயிருடன் இருக்கும் வரை பார்த்து கொள்ள தயாராக இருக்கிறேன்.
ஆனால் ஹரி வைரவன் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாது எனக்கருதி என்னிடம், கருணை கொலை செய்ய சொல்லி கேட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, ஹரி வைரவனுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலர் உதவி செய்து வந்தனர்.
ஹரி வைரவன் மரணம்
இந்நிலையில், ஹரி வைரவன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஹரி வைரவனின் உடல், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது.
படிப்புச் செலவை ஏற்ற விஷ்ணு விஷால்
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 6 மாதமாக ஹரி வைரவனுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தேன். வைரவன் மரணம் மிகவும் வேதனையை அளிக்கிறது. மேலும் அவரின் குழந்தையின் படிப்பு செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஹரி வைரவன் இறப்பதற்கு துன் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். "உதவிகளுக்கு நன்றி மச்சான்" என்ற வாய்ஸ் மெசேஜை நான் நேற்று முன்தினம்தான் கேட்டேன் என்றார்.