அப்போது ஆடிட்டர்.. இனி ஆல் ரவுண்டர்.. இந்திய அணியில் "தமிழர்" வெங்கடேஷ் ஐயர்
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் அறிமுக வீரராக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியவர் வெங்கடேஷ் ஐயர். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அவர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடுகிறார்.
வெங்கடேஷ் ஐயர் படிப்பில் கில்லாடியாக திகழ்ந்தவர். சி.ஏ. தேர்வில் வென்று பல லட்சம் ரூபாய் மாத சம்பளமாக வெங்கடேஷ் ஐயருக்கு வேலை கிடைத்தது.
இருப்பினும் கிரிக்கெட் மீது காதல் இருந்ததால், வேலையை விட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி, தற்போது இந்திய அணிக்காக விளையாடுகிறார்.
26 வயதான வெங்கடேஷ் ஐயர், ஐ.பி.எல். தொடரில் பட்டையை கிளப்பினார். இதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார்.
வெங்கடேஷ் ஐயரின் வருகையால் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹர்திக் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பந்துவீச வில்லை. உலக கோப்பையிலும் சோபிக்கவில்லை. இதனால் இனி அவர் அணிக்கு திரும்புவது கடினமே.