Thursday, Apr 3, 2025

அந்த பொண்ண பத்தி பேச நீ யார்..செருப்பால அடிக்கனும் - பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் பட்?

Priyanka Deshpande Cooku with Comali Venkatesh Bhat Manimegalai
By Swetha 6 months ago
Report

மணிமேகலை – பிரியங்கா சர்ச்சை குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் வெங்கடேஷ் பட்.

வெங்கடேஷ் பட்

தன்மானம், சுயமரியாதை காரணமாக இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் அங்கமாக இருக்கப்போவதில்லை என்று மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அந்த பொண்ண பத்தி பேச நீ யார்..செருப்பால அடிக்கனும் - பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் பட்? | Venkatesh Bhats Take On Priyanka Manimegalai Issue

அதோடு, அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தொகுப்பாளர் ஒருவரால்தான் இப்படியான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகரம் பெரும் சர்ச்சையாக வெடித்து,

சமூக வலைத்தளப்பக்கத்தில் மணிமேகலை - பிரியங்காவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் நடுவராக இருந்து பிறகு விலகிய வெங்கடேஷ் பட் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்; விதி மீறல் - வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்; விதி மீறல் - வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

நீ யார்..

அண்மையில், தனியார் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் நடந்தது ஒரு அக்கா, தங்கச்சி சண்டை. இத பத்தி பேச யாருக்குமே உரிமை இல்ல. மணிமேலையும் பிரியங்காவும் பேசி தீர்த்துக் கொள்வார்கள்.

அந்த பொண்ண பத்தி பேச நீ யார்..செருப்பால அடிக்கனும் - பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் பட்? | Venkatesh Bhats Take On Priyanka Manimegalai Issue

நடுவில் இருப்பவர்கள் கிளம்பி தங்களுடைய எண்ணங்களை சொல்கிறார்கள். முதலில் ஒரு பெண்ணை குறித்து தவறாக பேச அவர்கள் யார்? அப்படி பேசும் எவனா இருந்தாலும் அவனை செருப்பால அடிக்கணும். அந்த பொண்ணு ஒரு வீடியோ போட்ருக்கு,

அந்த வீடியோல என்ன சொல்லிருக்கு அத பத்தி பேசு… அந்த வீடியோ பத்தி பேசு… அதவிட்டு அவங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச யாருக்கும் உரிமையே கிடையாது. எனவே, இந்த சர்ச்சை தன்னாலே அடங்கி போயிடும்” என்று தெரிவித்துள்ளார்.