தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்- தமிழக அரசு உத்தரவு

By Yashini Sep 01, 2025 03:55 AM GMT
Report

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த 29ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

இவரது பனி ஓய்வை தொடர்ந்து, அடுத்த டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமனம் செய்து உள்துறை கூடுதல் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்- தமிழக அரசு உத்தரவு | Venkataraman Appointed Tamil Nadu Dgp

நாகபட்டினத்தை சேர்ந்த வெங்கட்ராமன் 1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவர்.

மேலும், இவர் பல மாவட்டங்களில் எஸ்பியாகவும், சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், வெங்கட்ராமன் டிசம்பர் மாதம் வரை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பணியாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.