அந்தியூரில் பயங்கர கார் விபத்து - திமுக எம்.எல்.ஏ.வுக்கு எலும்பு முறிவு

DMK Accident
By Nandhini Jul 28, 2022 01:33 PM GMT
Report

கார் விபத்து

அந்தியூர் திமுக எம்.எல்.ஏ ஏ.ஜி. வெங்கடாச்சலம் இன்று சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு 11:30 மணியளவில் அந்தியூரிலிருந்து ஈரோட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

டிரைவர் கார்த்திகேயன் (35) காரை ஓட்டி வந்துள்ளார். கார் அந்தியூர், வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், ரோட்டின் தலைகுப்புற கார் கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் டிரைவர் கார்த்திகேயன், முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.

அந்தியூரில் பயங்கர கார் விபத்து - திமுக எம்.எல்.ஏ.வுக்கு எலும்பு முறிவு | Venkatachalam Dmk Mla

எலும்பு முறிவு 

இவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஏ.ஜி வெங்கடாசலம் எம்எல்ஏவுக்கு உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டிரைவர் கார்த்திகேயனுக்கும், முருகனுக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.