தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை

Tamil nadu TVK C Joseph Vijay
By Vinoja Jun 26, 2026 02:21 PM GMT
Report

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அரசாணையின்படி, அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு காலம் இப்பொறுப்பில் செயல்படுவார். முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நியமனங்களில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்திக்கச் சென்றபோதும், பின்னர் முதலமைச்சரின் பதவியேற்பு விழாவிலும் வெங்கட நாராயணா விஜயுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முதலமைச்சரின் சிறப்பு பிரிவு (அரசியல்) அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக