இப்படியெல்லாமா கிண்டல் பண்ணுவீங்க - கடுப்பான வெங்கட் பிரபு : என்ன நடந்தது?

venkatprabhu willsmith oscarawards2022
By Petchi Avudaiappan Mar 28, 2022 05:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

ஆஸ்கர் மேடையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கடுமையான கண்டனத்தை முன் வைத்துள்ளார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் வில் ஸ்மித் பெற்றார்.  

இதனிடையே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் வில் ஸ்மித் மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் மொட்டை அடித்தது போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டது தொடர்பாக கிண்டல் செய்தார். முதலில் சிரித்தபடி இதனை பார்த்த வில் ஸ்மித் திடீரென மேடையில் ராக் கன்னத்தில் பளார் என ஒரு அடி அடித்தார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் உலகளவில் வைரலாக நிகழ்ச்சியின் அழுதுக்கொண்டே மனைவி மீதான அன்பின் காரணமாக கோபத்தில் தொகுப்பாளரை அடித்ததற்காக மன்னிப்பு கோரினார். ஜாடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. அவர் கிறிஸ் ராக்கின் ஜோக்கை கேட்டு கண் கலங்கியதன் காரணமாகவே வில் ஸ்மித் இப்படியான செயலில் ஈடுபட்டார். 

இந்நிலையில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இது வேடிக்கையான, ஜோக்கிற்கான விஷயமா.? ஆஸ்கார் விழாவில் ஸ்மித்தின் மனைவிக்கு கண்டறியப்பட்ட நோய் பற்றி பேசுவது விளையாட்டா?  அந்த விழாவில் அது பற்றி பேசுவது நன்றாக இருக்கிறது என நினைக்கிறீர்களா? என்று மிக கடுமையான கேள்விகளை வெங்கட் பிரபு எழுப்பியுள்ளார்.