ஹாட் லிப்-கிஸ்... - வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை 2’ - தீயாய் பரவும் டிரைலர்
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் தான் வெங்கட் பிரபு. இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனையடுத்து, இவர் ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’ போன்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில் சிம்புவை வைத்து ‘மாநாடு’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இதனையடுத்து, தற்போது வெங்கட் பிரபு ‘மன்மதலீலை 2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் தற்போது சமூகவலைத்தளத்தில் ரிலீசாகியுள்ளது. இந்த டிரைலரில் லிப்கிஸ், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்துள்ளது.
இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், இது வெங்கட் பிரபு படம் தானா என்று ஷாக்காகியுள்ளனர்.
தற்போது இந்த டிரைலர் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.