இது எல்லாமே உங்கள் அப்பாவின் ஆசி: வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்

venkat prabhu
By Fathima May 02, 2021 10:38 AM GMT
Report

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வரும் விஜய்வசந்துக்கு பிரபல இயக்குனரான வெங்கட் பிரவு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார் கொரோனா தொற்றால் காலமானதை தொடர்ந்து, அத்தொகுதி காலியாக இருந்தது.

கடந்த ஏப்ரல் 6ம் தேதியே அத்தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, இதில் காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர்.

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், விஜய்வசந்த் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், பிரபல இயக்குனரான வெங்கட்பிரவு, உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், இவை எல்லாம் உங்கள் அப்பாவின் ஆசி என டுவிட் செய்துள்ளார்.