குடிநீர்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : சிபிசிஐடிக்கு மாற்றம்

By Irumporai Jan 14, 2023 11:35 AM GMT
Report

புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் மலம்  

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் குடிநீர் தொட்டியில் சிலர் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவவத்தை புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளணுர் பகுதி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விரைந்து குற்றவாளிகளை கண்டறிய வவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. 

குடிநீர்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : சிபிசிஐடிக்கு மாற்றம் | Venkai Valley Area Was Handed Over To The Cbcid

சிபிஐக்கு மாறும் விசாரணை

இதனை அடுத்து நேற்று , காவல் துறை சார்பில் வெளியிலாக தகவல் குறிப்பில், இதுவரை 80 க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யவும் இந்த வழக்கை காவல் துறையினரிடம் இருந்து சிபிசிஐடி துறையினருக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன் படி, இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை சிபிசிஐடி விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.