தோனியை புகழ்ந்து தள்ளிய வெங்கடேஷ் ஐயர் - ரசிகர்கள் உற்சாகம்

MS Dhoni Venkatesh Iyer tweet viral
By Anupriyamkumaresan Sep 30, 2021 09:39 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில், கடைசி ஓவர் கடைசி பந்தில் சென்னை வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்த தோல்வியால் கொல்கத்தா அணி 3-வது இடத்துக்கு முன்னேறமுடியாமல் போனது.

தோனியை புகழ்ந்து தள்ளிய வெங்கடேஷ் ஐயர் - ரசிகர்கள் உற்சாகம் | Vengateshiyer Praise Thala Dhoni Tweet Viral

இதையடுத்து, போட்டி முடிந்த பின் தோனியிடம் சென்று வெங்கடேஷ் ஐயர் சில நுணுங்களை கேட்டுக்கொண்டார். இந்த புகைப்படமும் வைரலானது.

இந்த நிலையில், அந்த புகைப்படத்தை பகிர்ந்து, வெங்கடேஷ் ட்விட்டர் பக்கத்தில், தல தல தான், வாத்தியின் அறிவுரை கடினமான சூழ்நிலைகளில் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை மாணவன் எனக்கு கற்பித்துள்ளார்.

எல்லா காலத்திலுமே அவர் தான் சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகும் நிலையில் பலரும் இதனை மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.