வேங்கைவயல் விவகாரம்: 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் நேரடி விசாரணை
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவம் தொடர்பாக வேங்கைவயலில் வரும் 6- ஆம் தேதி ஒரு நபர் ஆணையம் நேரடி விசாரணை நடத்தவுள்ளது.
வேங்கை வயல் சம்பவம்
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
ஒரு நபர் ஆணையம் விசாரணை
தற்போது இந்த ஆணையம் வரும் 6- ஆம் தேதி நேரில் விசாரணை நடத்தவுள்ளது.முதலில் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேங்கைவயல் சென்று நீதிபதி சத்யநாராயணன் விசாரணை நடத்துகிறார்.
வழக்கில் விசாரணையின்போது கிடைத்த தகவல்களில், சந்தேகங்களை தீர்க்கவும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டி உள்ளதால் இந்த விசாரணை நடைபெறுகிறது.