வேங்கை வயல் சம்பவம் : இரத்த பரிசோதனை தேதி மாற்றம்
வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக 10 பேருக்கு மேற்கொள்ளவிருந்த இரத்த மாதிரி சோதனை தேதி மாற்றப்பட்டுள்ளது.
இரத்த மாதிரி சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக 10 பேருக்கு மேற்கொள்ளவிருந்த இரத்த மாதிரி சோதனை 8 - ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே 3 பேருக்கு இரத்த மாதிரி எடுத்த நிலையில், இன்று 10 பேருக்கு மேற்கொள்ளவிருந்த சோதனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இறையூரை சேர்ந்த மாற்று சமூகத்தினர் 8 பேர், வேங்கைவயலை சேர்ந்த பட்டியலின மக்கள் 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே, வேங்கைவயலை சேர்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட 3 பேருக்கு இரத்த மாதிரி பரிசோதனையை செய்யப்பட்டது.
தேதிமாற்றம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளவதற்காக இரு கிராமங்களை சேர்ந்தவர்களிடம் இரத்த மாதிரி எடுக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.