வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை நெருங்கிய சிபிசிஐடி- சிக்கிய நபர்கள் யார்
வேங்கைவயல் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி குற்றவாளிகளை நெருங்கியுள்ளனர்.
குடிநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், அதனை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
டிஎன்ஏ டெஸ்ட்
மேலும் அதனை சிபிசிஐடி கடந்த 4 மாதங்களாக விசாரணை செய்து வந்த நிலையில் 11 பேரை சந்தேக படுவதாகவும். அந்த மலம் கலந்த குடிநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். தற்பொழுது அந்த மாதிரிகளை கொண்டு சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட 11 போரையும் டிஎன்ஏ டெஸ்ட் செய்து ஒப்பிட்டு பார்க்க வேண்டும் அதற்கு நீதிமன்றம் உத்தரவளிக்கவேண்டும் என்றும் கூறினர்.
மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று பரிசோதனைக்கு அனுமதி அழித்துள்ளார்.
மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என்றும் தெரியவந்துள்ளதாக கூறினர். பிறகு டிஎன்ஏ சோதனை முடிந்தவுடன் அவை ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.